Sunday, June 13, 2010

அகண்டபாரதத்தின் ஆரிய , திராவிட கலாச்சாரத்தில்  இதிகாச சப்தரிசிகளும் பதினெட்டு சித்தர்களும் பகுத்தரிவதிகளும் அறிஞர்களும் மருத்துவம் , ஜோதிடம் , வானவியல் ஆகியவற்றில் சிறந்து செயலாற்றல் மரத்தமிழனுக்கு இருப்பினும் இன்றைய காலத்தின் கட்டாயம் அந்நிய நவீன மருத்துவத்தையும் பொன்மொழி செம்மொழித் தமிழில் தெரிந்துகொள்ள தீர்க்க சமூக நோக்கு சேவை தான் மருத்துவர்  முகமது. சு. இராஜ்கபூர். பி.இ .எம்., அவர்கள் மருத்துவ உரையை செந்தமிழ் பாதங்களுக்கு அர்பணிக்கும் அன்பளிப்பு. இந்த மருத்துவ கட்டுரையை செம்மொழியாம் இனிய தமிழ் மொழியில் முடிந்த அளவு இயற்றி பிரசுரிப்பதும் தமிழன் பொன்மொழியான செம்மொழியில் தாயை அறிந்து பயனடைந்தால் எமது நோக்கம் பயன்பெறுவது  எமது ஆவா......!!!!!! 
http://thaaicurecarecharityclinic.yolasite.com/
   
"வாழ்க தமிழ்!              வெல்க தமிழகம்" ! 
தாய் அன்பளிப்பு உலக தமிழ் செம்மொழி மாநாடு 23/24/25/26-06-2010              
தாய்  சமூகசேவை மற்றும் ஆரோக்கியம்
     சரீரம் மற்றும் உடல்கூற்று (Anotomy and Physiology)
தேகத்தின் அமைப்பும் அதன் செயல்பாடுகளும் :
         மானிட தேகமானது எலும்புகூட்டின் மேல் உருப்படுத்தப்பட்டிரிக்கிறது.இந்த எலும்புக்கூட்டின் செயல்பாடுகள்,
  1. உடலுக்கு உருவத்தையும் உறுதியையும் கொடுத்தல் .
  2. சதைகள் (Muscles) இக்கூட்டை பற்றி இசைந்து கொள்வதற்கு காரணமாயிருத்தல் .
  3. மண்டை, மார்பு, அடிவயிறு, இவைகளினுள் இருக்கும் முக்கியமான உறுப்புகளை பாதுகாத்தல்.
              நமது தேகத்திலுள்ள எலும்புகளை நான்கு வகையாகப் பிரிக்கலாம். 
  1. மண்டை எலும்புகள், 
  2. முதுகுத்தண்டு,
  3. மார்புக்கூடு,
  4. கைகால் எலும்புகள்,


  1. மண்டை எலும்பு - இது 22 துண்டுகளால் ஆகியது. அவையாவும் சேர்ந்து ஒரு பெட்டிப்போன்ற பாகமாக அமைக்கப் பட்டிரிக்கிறது. அதனுள் மூளை வைக்கப்பட்டிருக்கிறது.
  2. முதுகுத்தண்டு - இது 33 எலும்புத்துண்டுகளால்  ஆக்கப்பட்டது. ஒவ்வொன்றுக்கும் முள்ளெலும்பு (Vertebra) என்று பெயர். கழுத்து எலும்பு 7, முதுகெலும்பு 12, இடுப்பெலும்பு 5, குண்டி எலும்பு 5, வால் எலும்பு 4, ஆக 33 எலும்புத்துண்டுகள். முதுகுத்தண்டின்  நடுவே ஒரு வாய்க்கால் இருக்கிறது. அது வழியாக தண்டு வடம் (Spinal cord) செல்லுகிறது.



  3. மார்புக்கூடு - முதுகெலும்பு 12-ல் இருந்தும் 12 ஜோடி முள் எலும்புகள் மார்பின் முன்பக்கம் வரை வளைவாய் வந்து மார்பெலும்பு (Sternum) என்ற எலும்புடன் சேர்ந்து மார்புக்கூடு அமைக்கப்பட்டிருக்கிறது. இதை உதரவிதானம் (Diaphragm) என்ற சதை வயிற்றிலிருந்து குறுக்கே (Abdoman) பிரிக்கிறது. மார்புக்கூட்டிற்குள் நுரையீரல் (lung) இருதயம் (ஹார்ட்) இருக்கிறது.    

No comments: